
தமிழ்நாட்டுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையே கப்பல் சேவை
வட மாகாணத்திற்கும் -தமிழ்நாட்டிற்கும் இடையில் கப்பல் சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கு துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சுக்கும் இந்திய அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த திட்டத்தின் கீழ், ஒரே நேரத்தில் 500 பயணிகளை ஏற்றிச் செல்லும் வசதிகள் கப்பல் பயன்படுத்துவது குறித்து ஆராயப்படவுள்ளது.
டிசம்பர் 12 முதல் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா அபிவிருத்தி சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவிக்கையில்,
சென்னையில் இருந்து வாரத்திற்கு ஐந்து விமான சேவைகள் கோரப்பட்டுள்ளன.
சுற்றுலாப் பயணிகளை இலங்கையில் உள்ள கண்டி, நுவரெலியா மற்றும் நாட்டின் தென் பகுதிகள் உட்பட பயணிக்கும் வகையில் மற்ற இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு வசதியாக சுற்றுலாத்துறை அதிகாரிகளும் ஈடுபடுவார்கள் என்றார்.
இலங்கைக்கு விஜயம் செய்ய விரும்பும் குடும்பங்களுக்கு உதவும், வகையில் கடற்கரைக்கு முன்னால் உள்ள இடங்களில் அவர்களது திருமண விழாக்களை நடத்தவும் இதுபோன்ற திருமண விழாக்களில் ஏராளமான பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என்றார்.
கவர்ச்சிகரமான மற்றொரு பகுதி சூதாட்ட விடுதிகளுக்காக நாட்டிற்கு வருபவர்கள்.
விமான நிலையம் மற்றும் விமான சேவைகள், தலைவர், மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜி.ஏ.சந்திரசிறி தெரிவிக்கையில்,
இதுவரை அலையன்ஸ் எயார் யாழ்ப்பாணத்திற்கு வாரத்திற்கு மூன்று முறை பறக்க ஒப்புக்கொண்டுள்ளது.
விமானக் கட்டணங்கள் குறித்து முடிவெடுப்பது குறித்து வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார்.
யாழ்ப்பாணம் மற்றும் பிற நகரங்களுக்கு இடையே பயணிகள் பறக்கும் வகையில் உள்நாட்டு விமான சேவையை தொடங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
பலாலியில் உள்ள யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் சுங்க கவுண்டர்கள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன, என்றார்.
