இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்

 

-கல்முனை நிருபர்-

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தராக பிரபல சட்ட மேதை ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு முன்னர் தேசபந்து ஜெசிமா இஸ்மாயில்,  பேராசிரியர் இஸ்ஹாக் ஆகியோர் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தர்களாக இருந்திருக்கிறார்கள்.

எதிர்வரும் 5 ஆண்டுகளுக்காக தென்கிழக்கு பல்கலைகழகத்தின் வேந்தராக இவர் செயற்படும் விதத்தில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.