
முட்டைக்கு தட்டுப்பாடு
முட்டை உற்பத்தியாளர்கள் தமது வியாபார நடவடிக்கைகளில் இருந்து விலகுவதால், எதிர்காலத்தில் நாட்டில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என மேல்மாகாண கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சந்தையில் ஒரு முட்டை 50 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டாலும், அதன் உற்பத்தியாளர்களிடம் இருந்து 45 ரூபாவிற்கும் குறைவான விலையில் முட்டையொன்று கொள்வனவு செய்யப்படுவதாக, சங்கத்தின் தலைவர் நிரேஷ் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.
