பேரூந்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு

-கிளிநொச்சி நிருபர்-

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் நேற்று சனிக்கிழமை பேரூந்தில் இருந்து தவறி விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழிலிருந்து சுற்றுலாவுக்காக திருகோணமலை சென்று திரும்பி வந்துகொண்டிருந்த வேளை பேரூந்தில் இருந்த நபர் திடீரென தவறி பளை இத்தாவில் பகுதியில் ஏ9வீதியில் விழுந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் பலத்த காயங்களுக்குள்ளான நபர் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின் யாழ் போதன வைத்திசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிருழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கொடிகாமம் மீசாலை பகுதியை சேர்ந்த குகதாசன் விமல்ராச் (47 வயது) என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.