கிணற்றிலிருந்து முதியவரின் சடலம் மீட்பு

-யாழ் நிருபர்-

 

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு – மானிப்பாய் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை முதியவர் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

மனநலம் பாதிக்கப்பட்ட குறித்த முதியவரை நேற்று காணவில்லை என வீட்டில் உள்ளவர்கள் தேடிய வேளை அவரது சடலம் கிணற்றில் இருப்பது அவதானிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. அதனையடுத்து மீட்கப்பட்ட குறித்த முதியவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மாணிக்கம் கணேசலிங்கம் (வயது 70) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.