
வரி திருத்தங்களை மீளப்பெற கோரிக்கை
வைத்தியர்கள் மற்றும் ஏனைய தொழில் வல்லுநர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கியிருப்பதால் உத்தேச வரி திருத்தங்களை அரசாங்கம் மீளப்பெற வேண்டும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் பேச்சாளர் கலாநிதி சமில் விஜேசிங்க இதனை தெரிவித்தார்.
