சறுக்கி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தவறுதலாக சறுக்கி விழுந்த இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

வெள்ளைமணல்- சின்னம்பிள்ளைச் சேனை பகுதியில் கருவாட்டு கடை நடாத்தும் இளைஞரொருவர் கையடக்க தொலைபேசியில் பேசிக்கொண்டு மண்கிண்டி குளத்திற்கு சென்று கொண்டிருந்தபோது தவறுதலாக விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

இவ்வாறு உயிரிழந்தவர் வெள்ளைமணல்- சின்னம்பிள்ளைச்சேனை பகுதியில் வசித்து வரும் அன்சார்தீன் அம்ஹர் (21வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இளைஞன் ஏற்கனவே வலிப்பு நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாகவும் உறவினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

மரணம் தொடர்பில் விசாரணைகள் முடிவுற்ற பின்னர், உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைக்க உள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.