
நிறுவன பதிவுக்கட்டணங்கள் திருத்தம்
தனியார் மற்றும் பொது நிறுவனங்களின் பதிவுக்காக விதிக்கப்படும் கட்டணங்கள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வரும் பல கட்டணங்களில் திருத்தம் செய்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 25 ஆம் திகதி, நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் 25 வகையான நிறுவனங்கள் மற்றும் சங்கங்களின் பதிவுக் கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன.
இதன்மூலம், பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை பதிவு செய்வதற்கான திருத்தப்பட்ட கட்டணம் 4,600 ரூபா.
பப்ளிக் லிமிடெட் நிறுவனப் பதிவுக்கான திருத்தப்பட்ட கட்டணம் 23,000 ரூபா
ஒரு நிறுவனத்தின் பெயருக்கான ஒப்புதலுக்கான திருத்தப்பட்ட கட்டணம் 2,300 ரூபா.
