காலாவதியாகவுள்ள 6 மில்லியன் ஃபைசர் தடுப்பூசிகள்

அக்டோபர் 31 அன்று காலாவதியாகவிருக்கும் கிட்டத்தட்ட 6 மில்லியன் ஃபைசர் தடுப்பூசிகளை என்ன செய்வது என்பது பற்றிய முடிவு நவம்பர் தொடக்கத்தில் எதிர்பார்க்கப்படுகிறது என்று தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

60 வயதுக்கு மேற்பட்ட 2.7 மில்லியன் மக்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் அபாயத்தில் உள்ள நிலையில், அவர்களில் 2 லட்சம் பேர் மட்டுமே நான்காவது தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக தொற்றுநோயியல் துறையின் பணிப்பாளர் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.