பெரும்போகத்திற்கு தேவையான உரம் நாட்டை வந்தடைந்தது

பெரும்போக பயிர்ச்செய்கைக்கு தேவையான 12 ஆயிரத்து 500 மெட்றிக் தொன் யூரியா உரத்தினை ஏற்றிய கப்பல் கொழும்பு துறைமுகத்த்தை வந்தடைந்துள்ளது.

குறித்த கப்பல் இன்று வியாழக்கிழமை நாட்டினை வந்தடைந்துள்ளது.

பெரும்போகத்திற்கு தேவையான யூரியாவினை இறக்குமதி செய்வதற்கு கோரப்பட்ட கேள்வி பத்திரத்திற்கு அமைவாகவே முதலாவது யூரியா தொகை நாட்டை வந்தடைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மெட்றிக் தொன் யூரியா உரம் எதிர்வரும் நவம்பர் மாத இறுதியில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

பெரும்போக பயிர்ச்செய்கைக்கு தேவையாக உரத்தினை இறக்குமதி செய்வதற்கு உலக வங்கியினால் 110 மில்லியன் டொலர் கடனாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.