3 நிபந்தனைகளுடன் கூட்டமைப்பினர் ஜனாதிபதியடன் இன்று கலந்துரையாடல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான மற்றுமொரு கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதற்கு முன்னதாக கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்மந்தனின் இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் முக்கியமாக 3 நிபந்தனைகளை அரசிடம் முன்வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் பிடியில் உள்ள வடக்கு, கிழக்கு காணிகளை உடனடியாக விடுவித்தல், 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துதல் உள்ளிட்டவை இதில் உள்ளடங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.