இதை வாரத்துக்கு 3 முறை பாவியுங்கள்
உங்கள் கழுத்துப் பகுதி கருப்பாக அசிங்கமாக உள்ளதா? நிறைய பேருக்கு உடலின் மற்ற பகுதிகளை விட கழுத்துப் பகுதி சற்று கருப்பாக இருக்கும். சில சமயங்களில் கழுத்துப்பகுதி கருப்பாக இருப்பதற்கு ஹார்மோன்கள் மற்றும் சருமம் தொடர்பான பிரச்சனைகள் காரணமாக இருக்கலாம். சிலருக்கு கழுத்துப் பகுதியில் உள்ள மடிப்புக்களில் அழுக்குகள் அதிகம் சேர்ந்தாலும் கருப்பாக காட்சியளிக்கும். இப்படி அழுக்குகளால் கருமையான கழுத்தை நமது வீட்டு சமையலறையில் உள்ள சில பொருட்களைக் கொண்டே போக்கலாம்.
கடலை மா மற்றும் மஞ்சள் தூள்
சமையலறையில் பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு பொருள் தான் கடலை மா. இந்த கடலை மா சருமத்தில் உள்ள கருமையை போக்க மற்றும் சரும அழகை மேம்படுத்த பழங்காலம் முதலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அத்தகைய கடலை மா ஒரு டீஸ்பூன் எடுத்துஇ அதில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் தயிர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்துஇ கருமையாக உள்ள கழுத்துப் பகுதியில் தடவி உலர வைத்துஇ பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால்இ கழுத்தில் உள்ள கருமை காணாமல் போகும்.
தேன் மற்றும் எலுமிச்சை
கழுத்தில் உள்ள கருமையைப் போக்க தேன் மற்றும் எலுமிச்சையை பயன்படுத்தலாம். அதற்கு எலுமிச்சை சாற்றியில் சிறிது தேனை சேர்த்து கலந்துஇ கழுத்துப் பகுதியில் தடவி சிறிது நேரம் ஊற வைத்துஇ பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால்இ கழுத்துப் பகுதி பளிச்சென்று அழகாக காட்சியளிக்கும்.
தயிர்
ஆம்இ நமது வீட்டு சமையலறையில் உள்ள தயிர் கூட சரும கருமையைப் போக்குவதில் சிறந்தது. இதற்கு தயிரில் உள்ள இயற்கை நொதிகள் தான் காரணம். அந்த தயிருடன் அசிட்டிக் அமிலம் நிறைந்த எலுமிச்சை சாற்றினை சேர்த்து பயன்படுத்தும் போது இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும். அதற்கு 2 டேபிள் ஸ்பூன் தயிருடன்இ ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்துஇ கழுத்தில் தடவிஇ 20 நிமிடம் ஊற வைத்துஇ பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
உருளைக்கிழங்கு சாறு
உருளைக்கிழங்கு சாற்றில் சரும நிறத்தை மேம்படுத்தும் பண்புகள் உள்ளன. எனவே அந்த உருளைக்கிழங்கு சாற்றினை கருமையாக இருக்கும் கழுத்துப் பகுதியில் தடவி 10-20 நிமிடம் ஊற வைத்துஇ பின் நீரில் நனைத்த பஞ்சு உருண்டையால் துடைத்து எடுக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வரஇ கழுத்தில் உள்ள கருமை நீங்கும்.
பப்பாளி மற்றும் தயிர்
கழுத்தில் உள்ள அழுக்கை நீக்க பப்பாளி காய் மற்றும் தயிரைப் பயன்படுத்தினால் சிறப்பான பலன் கிடைக்கும். அதற்கு பப்பாளி காயை அரைத்து பேஸ்ட் செய்துஇ அத்துடன் தயிர் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்துஇ கழுத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்ய கழுத்தில் உள்ள கருமை விரைவில் நீங்கும்.