முழங்கால் சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் ரோபோ
இன்றைய காலகட்டத்தில் அனைத்துத் துறைகளிலும் தொழில்நுட்பம் என்பது அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. குறிப்பாக மருத்துவத்துறையில் தொழில்நுட்பம் அதிக வேகமாக வளர்ந்துவரும் நிலையில், இதனைப் பயன்படுத்தி எவ்வித பக்க விளைவுகளும் இல்லாமல் அறுவை சிகிச்சைகளை செய்ய வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.
மருத்துவ வல்லுநர்கள். குறிப்பாக கடினமான மற்றும் நுட்பமான அறுவை சிகிச்சைகளுக்கு மருத்துவர்கள் சமீப காலங்களாக அதிகளவில் ரோபோட்டிக் முறையைப் பயன்படுத்துகின்றனர்.
இச்சிகிச்சையின் மூலம் முழங்கால் உறுதிப்பாடு, சீரமைப்பு மற்றும் முழங்காலின் இயக்கம் ஆகியவற்றை மதிப்பிடுவதற்கு டைனமிக் குறிப்புகளைப் பயன்படுத்தும் ஒரு தொழில்நுட்ப வசதி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அறுவை சிகிச்சை நிபுணரின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், தனக்குரிய வேலையைத் திறம்பட செய்து முடிக்கும் திறன் இந்த அறுவை சிகிச்சையில் ரோபோ கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.
மேலும், ரோபோட்டிக் மூலம் செய்யப்படும் மொத்த மூட்டு மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் மென்மையான திசுக்கள் துண்டிப்பினால் ஏற்படும் பிரச்சனை மற்றும் தசைக்காயம் ஆகியவற்றின் பாதிப்பைக் குறைக்கிறது. அறுவை சிகிச்சை செய்த சில நாள்களிலேயே நேராக கால்களை உயர்த்துதல் போன்ற பிசியோதெரபி செயல்களை எவ்வித இடையூறும் இன்றி செய்யமுடிகிறது.
ரோபோட்டிக் முறையிலான மொத்த மூட்டு மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் பெறப்படும் நன்மைகள்:
துல்லியமாக செய்யப்படுகிறது.
குறைந்தபட்ச அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
நோயாளிகளுக்கு அதிக பாதுகாப்பை வழங்குவதாக உள்ளது.
அதிகரித்த நிலைத்தன்மை மற்றும் துல்லியமாக செயல்படுதல் அறுவை சிகிச்சைப் பின்னதாக விரைவாக குணமடைதல் மற்றும் பணிகளை திறம்பட செய்து முடித்தல்.
மேம்பட்ட கருவிகள் பயன்படுத்துவதால் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என மருத்துவர்களால் நிரூபணமாகியுள்ளது. எனவே எவ்வித அச்சமும் இன்றி மூட்டு வலி பிரச்சனை உள்ளவர்கள் இச் சிகிச்சையை மேற்கொள்ளலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
ரோபோட்டிக் முறையில் அறுவை சிகிச்சைகள் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு புதிய தொழில்நுட்பத்தோடு மக்களுக்கு அறிமுகமாகிறது என்பதால் எவ்வித தயக்கமும் இன்றி, நோயாளிகள் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.