பார்வையற்றோருக்கான T20 உலகக் கோப்பை : அரையிறுதிக்கு இலங்கை
இந்தியாவில் நடைபெற்று வரும் பார்வையற்றோருக்கான மூன்றாவது T20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு இலங்கையின் பார்வையற்றோர் கிரிக்கெட் அணி தகுதி பெற்றது.
இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஆட்டத்தில் நேபாளத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
மழை காரணமாக 15 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாள அணி 07 விக்கெட்டுக்களை இழந்து 87 ஓட்டங்களைப் பெற்றது.
பதில் இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி 07 ஓவர்கள் ஒரு பந்தில் 03 விக்கெட்டுக்கு 88 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பார்வையற்றோர் துடுப்பாட்டப் போட்டியில் இலங்கை அணியின் தொடர்ச்சியாக நான்காவது வெற்றி இதுவாகும்.
இதற்கு முன்னர் அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிராக இலங்கை அணி வெற்றி பெற்றது.