அவுஸ்திரேலியாவுக்கு 158 ஓட்டங்கள் இலக்கு

உலகக் கிண்ண T20 கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவுக்கு 158 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று அவுஸ்திரேலிய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்களைப் பெற்றது.

பதும் நிசங்க 40 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 26 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

அவுஸ்திரேலியா இன்னும் சிறிது நேரத்தில் துடுப்பெடுத்தாடவுள்ளது.