T20 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் : கிண்ணத்தை கைப்பற்றியது அவுஸ்திரேலியா அணி

இருபதுக்கு இருபது மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் அவுஸ்திரேலிய மகளிர் அணிக்கும், தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான போட்டியில் அவுஸ்திரேலிய மகளிர் அணி 19 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாட வந்த தென்னாபிரிக்க அணியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க முடிந்தது.