T-56 தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பகஹவத்தை பிரதேசத்தில் T-56 தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை கம்பஹா பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது 8 T-56 தோட்டாக்களும், 15 பயிற்சி தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 53 வயதுடைய அம்பகஹவத்தை, மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.