பருமனை குறைக்க செயற்கை சிகிச்சை முறை சரியானது அல்ல: நடிகர் பப்லு

உடல்பருமனை குறைக்க செயற்கை சிகிச்சை மேற்கொள்வது சரியானது அல்ல என நடிகர் பப்லு பிரிதிவிராஜ் தெரிவித்துள்ளார்.

தாம்பரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மணி என்பவர் பெருங்களத்தூரில் உடற்பயிற்சி கூடத்தை புதிதாக தொடங்கியுள்ளார். ராஜேந்திரன் மணி என்பவர் 5 முறை உலக ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இந்த உடற்பயிற்சி கூடத்தை நடிகர் பப்லு பிரிதிவிராஜ் மற்றும் நடிகர் ரியாஸ்கான் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இதையடுத்து, இந்த உடற்பயிற்சி கூடம் திறப்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு ஆணழகன் ஆக வடிவமைக்கப்பட்டிருந்த சிறப்பு பரிசுகளை நடிகர் பப்லு பிரிதிவிராஜ் மற்றும் நடிகர் ரியாஸ்கான் ஆகியோர் வழங்கி கௌரவித்தனர்.

பின்னர், இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது நடிகர் பப்லு பிரிதிவிராஜ் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“உடலை கட்டமைத்து உடற்பயிற்சி செய்வது எனக்கு மிகவும் பிடித்தமானது.கடந்த 25 ஆண்டுகளாக நான் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருகிறேன்.

மேலும், தற்போது உடல் பருமானாக இருப்பவர்கள் தங்களுடைய உடலை சீக்கிரமாகவே குறைக்க விரும்புகின்றனர். அதற்காக செயற்கை சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். செயற்கை சிகிச்சை மூலம் சீக்கிரமாக உடல் எடையை குறைப்பது சரியானது அல்ல. உடல் எடையை குறைப்பதில் குறுக்கு வழியில் செல்வது சரியாக அமையாது.

நான் கூட சினிமா வாழ்க்கையில் வெற்றி பெற 50 ஆண்டுகள் ஆனது. எனவே குறுக்கு வழியில் வருவது நிரந்தரமாகது” என அவர் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்