வாள்வெட்டுத் தாக்குதல்: 2 பேர் படுகாயம்

-மூதூர் நிருபர்-

திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த நபர்களினால் இன்று புதன்கிழமை அதிகாலை வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாள் வெட்டுத்தாக்குதலுக்கு 44,22 வயதுகளையுடைய தந்தையும், மகனும் படுகாயமடைந்துள்ளதாகவும் மகன் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையிலும் தந்தை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை கடந்த மாதம் இலங்கைத்துறை பகுதியில் வீடு புகுந்து மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். இதன் பின்னணியில் முன் கோபத்தினால் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதுவரை சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லையெனவும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்