கட்டிட தொகுதியில் தீ விபத்து : 50 ஆயிரம் பிராங் மதிப்பிலான பொருள் சேதம்
சுவிட்சர்லாந்தின் செங்கால மாநிலத்தில் கடந்த வியாழன் இரவு 7:30 மணியளவில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக மாநில பொலிசார் தெரிவித்துள்ளனர்.
செங்கால மாநிலத்தின் கோசவ் (Gossau) பகுதியில் இரவு 7:30 மணியளவில் அவசர அழைப்பு மையத்திற்கு அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்ததுள்ளது.
தீயணைப்புத் துறையினர் சமையல் அறையில் பரவியிருந்த தீயை காட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். தீயணைப்பு படையினர் வருவதற்கு முன்னரே அனைத்து குடியிருப்பாளர்களும் சொத்துக்களுக்கு பாரிய சேதம் ஏற்பாடத வகையில் தீ பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் பாரிய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 50,000 பிராங்குகள் மதிப்புள்ள பொருள் சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பீடப்பட்டுள்ளது. இச்சம்பவத்தின் போது குடியிருப்பாளர்கள் எவரும் காயமடையவில்லை எனவும் இவர்கள் வைத்திய பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
எண்ணெய் சூடேற்றப்பட்ட பாத்திரத்தில் தீப்பிடித்தமையே தீபரவலுக்கு காரணமாகவுள்ளதாக உள்ளதாக நம்பப்படுகிறது. தடவியல் நிபுணர்கள் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.