சுவிஸில் நடைபெற்ற மணிவிழாவில் பூநகரி பொன்.முருகவேள் “நிறை தமிழ் “ விருது வழங்கி கௌரவிப்பு

பல மனிதர்கள் நதியின் ஓட்டத்தில் மிதந்து செல்வர். சிலமனிதர்கள் நதிக்கு எதிரே நீந்திச் செல்வர். இவ்வாறு எதிர்நீச்சல் போடும் மனிதர்களே சமூக முன்னேற்ற ஊக்கிகளாகச் செயற்படுகின்றனர். அப்படியான ஒரு உன்னத ஆத்மாதான், தமிழின் முக்கிய வேர்தான பொன்.முருகவேள் என, கலாநிதி கல்லாறு சதீஷ் தெரிவித்துள்ளார்.

பூநகரி பொன்.முருகவேளின் மணிவிழா சுவிஸ் தலைநகர் பேர்னில் இடம்பெற்ற போது இதற்கு தலைமை தாங்கி உரையாற்றும் போதே கல்லாறு சதீஷ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மலேசியாவிலிருந்து வருகை தந்த தமிழ்ச் சொல்லாட்சியர் இரா.திருமாவளவன் திரு.திருமதி முருகவேள் தம்பதிக்கு தமிழ் முறைப்படி மணிவிழாவினை இனிதே நடாத்தி வைத்தார்.

கல்லாறு சதீஷ் தலைமையில் பூநகரியான் பொன்.முருகவேள் எனும் மணிவிழா மலர் வெளியிடப்பட்டது. மலரினைச் துணைப் பேராசிரியர் திரு.சுரேந்திரன் அறிமுகம் செய்ய,கல்வியாளர் திரு.அருந்தவராஜா மதிப்புரையாற்றினார்.

சுவிஸ் தமிழ் இலக்கியச் சங்கம் பொன்.முருகவேள் அவர்களுக்கு “நிறை தமிழ்” எனும் விருதினை வழங்கிக் கௌரவித்துள்ளது.