மட்டு.கொம்மாதுறை பகுதியில் 230 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த சந்தேகநபர் கைது!

சட்டவிரோதமான முறையில் டீசல் எரிபொருளை வைத்திருந்தமை, விற்பனை செய்தமை தொடர்பில் நேற்று திங்கட்கிழமை, மட்டக்களப்பு-கொம்மாதுறை பகுதியை சேர்ந்த ஒருவரை கைது செய்ததாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம், கொம்மாதுறை பகுதியில், வீட்டில் அனுமதிப்பத்திரமின்றி பீப்பாய்யில் 230 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் கைத்தனவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார். தெரிவித்தனர்