ஆலயத்தின் சிலை உடைத்த சந்தேகநபர் கைது!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம்-ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சரவணை பகுதியில் உள்ள சைவ ஆலயம் ஒன்றின் சிலையானது நேற்று திங்கட்கிழமை இரவு உடைத்து சேதமாக்கப்பட்டது.

இதுகுறித்து ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது

விசாரணைகளை மேற்கொண்ட ஊர்காவற்துறை பொலிஸார், சந்தேகநபர் ஒருவரை நேற்றிரவே கைது செய்தனர்.

அவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், அவரை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.