மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சுப்பர் ஜயன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பின்னர் 166 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9.4 ஓவர்கள் நிறைவில், விக்கெட் இழப்பின்றி 167 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பாக ட்ரவிஸ் ஹெட் 89 ஓட்டங்களையும் அபிஷேக் சர்மா 75 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இதேவேளை இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் அணியின் சார்பாக இலங்கை – யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் இந்த போட்டியில் அறிமுகமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்