
பாடசாலையில் உயரதிகாரி ஒருவரின் வாகனத்தில் சிக்கி மாணவன் உயிரிழப்பு!
கண்டி, மஹியாவ பகுதியில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவரின் வாகனத்தில் சிக்கி, அதே பாடசாலையில் கல்வி பயிலும் 7 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
இன்று வியாழக்கிழமை காலை 11.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரவிக்கப்படுகிறது.
குறித்த பணிப்பாளர் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு அதிலிருந்து இறங்கிச் சென்றதன் பின்னர், வாகனத்தின் பிரேக் பகுதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாகனம் திடீரென நகரத் தொடங்கியுள்ளது.
இதன்போது பாடசாலையில் நீர் அருந்திக் கொண்டிருந்த இரண்டு மாணவர்கள் அந்த வாகனத்தில் சிக்கியுள்ளனர்.
வாகனத்தில் சிக்கிய இரண்டு மாணவர்களில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காயமடைந்த மற்றைய மாணவன் தற்போது கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த விபத்து தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வாகனத்தின் உரிமையாளரான பணிப்பாளர், தான் வாகனத்தை நிறுத்திவிட்டு அதிலிருந்து இறங்கிச் சென்ற பின்னரே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
