STR49 திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது

நடிகர் சிம்பு வெற்றிமாறன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இத்திரைப்படம் வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகவுள்ளது.

கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரிக்கிறார். இது, அவர் தயாரிக்கும் 47வது திரைப்படமாகும்.

இதில் STR முற்றிலும் இளமையான தோற்றம் பெற வேண்டும் என்பதற்காக 10 கிலோ எடையை குறைத்துள்ளார் என்ற தகவல் வெளியானது.

இந்நிலையில் இன்று இயக்குனர் வெற்றிமாறனின் பிறந்தநாளை முன்னிட்டு திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.