
எவோட்ஸ் 2023 – சிறுகதைப் போட்டி
கடந்த 18 ஆண்டுகளாக புதிய அலை கலை வட்டம் நடத்தி வரும் எவோட்ஸ் கலை கலாசார போட்டி தொடரில் இவ்வாண்டுக்கான இரண்டாவது போட்டியாக சிறுகதைப் போட்டி நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் கலந்து கொள்வதற்கான நிபந்தனைகள் பின்வருமாறு..
1)தமக்கு விருப்பமான கருப்பொருளில் சிறுகதையை எழுதலாம்
2)ஒருவர் ஒரு பிரதியை மட்டுமே அனுப்ப முடியும்
3)இக் கதை முன்னர் எத்தகைய ஊடகங்களிலும் வெளிவந்ததாக இருக்கக்கூடாது.
4) ஒவ்வொரு சிறுகதையும் 550 சொற்களுக்கு குறையாமலும் 1250 சொற்களுக்கு குறையாமலும் இருத்தல் வேண்டும்.
5) அனுப்பபடும் சிறுகதை கட்டாயமாக பாமினி பென்டில் ரைப் செய்யப்பட்டு அனுப்பி வைக்க படவேண்டும்.
6) சிறுகதையை puthiyaalaikalaivaddam1980@gmail.com என்ற மெயில் முகவரிக்கும் மற்றும் 075 4880172 என்ற வட்சப் இலக்கத்திற்கும் அனுப்பி வைக்கலாம்.
7) சிறுகதையை வரும் 22.04.2023 முன்னர் கிடைக்க கூடியதாக அனுப்பி வைக்க வேண்டும்.
8)முடிவுகள் மே மாதம் மேற்பகுதியில் அறிவிக்கப்படும்.
9)இம்முறைபரிசளிப்பு மூன்று போட்டிகளுக்கும் ஒன்றானதாக நடத்தப்படும்.
பரிசு விபரங்கள் வருமாறு
முதலாம் பரிசு ரூபா 10 000 ,சான்றிதழ்.
இரண்டாம் பரிசு ரூபா 7 500,சான்றிதழ்
மூன்றாம் பரிசு ரூபா 5 000 ,சான்றிதழ்.
மேலதிக விபரங்களை பெற
076 2002701, 077 6274099,077 7412604,077 7111905
