
உரிமைப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் சிலைகள்: கோட்டை சுற்றுவட்டப் பகுதியில்
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்த தலைவர்கள் பொதுமக்கள், போராளிகளுக்காக யாழ்ப்பாணம் கோட்டை சுற்றுவட்டப் பகுதியில் சிலைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகக் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில் சிலைக்கு உரியவர்களின் கனவுகளைத் தாம் வென்றெடுக்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடிய தமிழ் தலைவர்கள், போராளிகள், மக்கள் எனப் பலரும் நினைவுகூரப்பட வேண்டியவர்களாக உள்ளனர். அத்துடன் அவர்களது கனவுகளும் நிறைவேற வேண்டும்.அதேபோன்று அவர்களை நினைவு கூருவதற்கான ஏற்பாடுகளும் குறிப்பாக அவர்களது நினைவுச் சிலைகள் நிறுவப்படுவது அவசியமாகும்.
இதில் கட்சி பேதங்களோ இயக்க வேற்றுமைகளோ இருக்காது. இவற்றினூடாக எமது மக்களின் இருப்புக்கள் மற்றும் வரலாறுகள் அடுத்த சந்ததியினருக்கு உண்மைத்தன்மையுடன் எடுத்துச் செல்லப்படுமெனக் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
