மீன் வெட்டியது தவறு என மனைவியை கத்தியால் குத்திய கணவன்

மீன்வெட்டும் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் கணவன் ஒருவர் தனது மனைவியை கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார்.

மீன் வெட்டிக்கொண்டிருந்த மனைவியிடம் மீன் வெட்டும் விதம் தவறு என கணவன் தெவித்துள்ளார்.

அதன்போது இருவருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் மனைவியை கணவன் கத்தியால் குத்தியுள்ளார்.

படுகாயமடைந்த மனைவி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தின் போது குறித்த மனைவி வயிறு, கை மற்றும் கால் பகுதிகளில் வெட்டுக் காயங்களுக்கு இலக்காகியுள்ளார்.