இலங்கையில் சராசரி 1,000 பெண்கள் மார்பக புற்றுநோயால் இறப்பு

இலங்கையைச சேர்ந்த சுமார் 4,000 பெண்கள்  மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும், வருடாந்தம் கிட்டத்தட்ட 1,000 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் இறப்பதாகவும் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் ( National Cancer Control Programme (NCCP)  தெரிவித்துள்ளது.

மார்பகப் புற்றுநோய்க்கு எதிராகப் போராடுவதற்கு குடிமக்களைத் திரட்டி, இந்த நோயைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், சமூக நடத்தை மற்றும் ஏனைய தொடர்புக்கான உத்தியை செயல்படுத்துவதற்காக https://breastcancerdetect.health.gov.lk/என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் இன்று புதன்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

மார்பக புற்று நோய் தொடர்பான மருத்துவ சேவைகளை அடுத்த வருடத்திற்குள் மாத்தறை, யாழ்ப்பாணம் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் , இவை இலங்கையில் உள்ள 26 மார்பக புற்றுநோய் சிகிச்சை நிலையங்களுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆராயப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.