பொலிஸாரின் முன்மாதிரியான செயற்பாடு : குவியும் பாராட்டுகள்
-யாழ் நிருபர்-
ஊர்காவற்துறை பொலிஸாரின் முன்மாதிரியான செயற்பாட்டை பலரும் பாராட்டியுள்ளனர்.
யாழ்.ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி விதானபத்திரன உட்பட்ட, பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்று வியாழக்கிழமை இரவு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்
இதன்போது, வீதியில் பணப்பை ஒன்று இருப்பதனை அவதானித்தனர். குறித்த பையினை எடுத்துப் பார்த்தவேளை, அதனுள் 35 ஆயிரம் ரூபா பணம், தங்க ஆபரணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் என்பன காணப்பட்டன.
அந்தப் பணப்பை ஊர்காவற்துறை பகுதியில் வசிக்கும் கிறிஸ்தவ மதகுரு ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டது. இது குறித்து அந்த மதகுருவுக்கு தகவல் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை பொலிஸ் நிலையத்திற்கு வந்த மதகுரு தனது பையினை பெற்றுக்கொண்டு பொலிஸாருக்கு நன்றி தெரிவித்துச் சென்றார்.
ஊர்காவற்துறை பொலிஸாரின் இந்த முன்மாதிரியான செயற்பாட்டை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.