கடவுச்சீட்டுகளை வழங்குவதற்காக 50 பிராந்திய மையங்கள்

கடவுச்சீட்டுகளை வழங்குவதற்காக 50 பிராந்திய மையங்களை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள தலைமை அலுவலகம் மற்றும் வவுனியா, குருநாகல், மாத்தறை மற்றும் கண்டி ஆகிய நான்கு பிராந்திய அலுவலகங்களிலும் கடவுச்சீட்டு வழங்கும் பணியை மேற்கொள்வதாகவும், கடவுச்சீட்டு வழங்கும் பணியை வினைத்திறனாக்க பிரதேச செயலகங்களில் மேலும் 50 புதிய நிலையங்கள் ஸ்தாபிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு விண்ணப்பதாரரும் இந்த அலுவலகத்திற்குச் சென்று அவரது பயோமெட்ரிக் மற்றும் புகைப்படங்களைக் கொடுத்து கடவுச்சீட்டை அவர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் கடவுச்சீட்டின் உரிமையாளரின் பயோ டேட்டாவை உள்ளடக்கிய இலத்திரனியல் சிப் கொண்ட மின் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.