எதிர்க்கட்சித் தலைவர் – நோர்வேயின் இலங்கைக்கான தூதுவர் சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் நோர்வே நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ட்ரைன் எஸ்கடெல் அம்மையார் ஆகியோர் இடையிலான சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இருதரப்பு ஒத்துழைப்பு குறித்த விரிவான கலந்துரையாடலாக இது அமைந்திருந்தது.

குறிப்பாக, இலங்கை தற்போது முகம் கொடுத்துள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்குத் தேவையான ஒத்துழைப்பையும்இஆதரவையும் வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் தூதுவரிடம் கோரிக்கை விடுத்தார்.

ஜனநாயக கட்டமைப்புகளை பாதுகாப்பது, மக்கள் நல மேம்பாட்டு முன்னெடுப்புகளான மூச்சு, பிரபஞ்சம் போன்ற வேலைத்திட்ட முன்வருகைகளுக்காக தமது பாராட்டுக்களையும் தூதுவர் இதன் போது தெரிவித்தார்.