
இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு 4.4 சதவீதத்தால் வீழ்ச்சி
இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு கடந்த ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் ஓகஸ்ட் மாதம் 4.4 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த ஜூலை மாதம் மூவாயிரத்து 765 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்ட இலங்கையின் கையிருப்பு, ஓகஸ்ட் மாதம் மூவாயிரத்து 598 மில்லியன் டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
