இலங்கையின் இலக்கிய சிகரம் சரிந்தது

இலங்கை இலக்கியப் பரப்பில் பாரிய பங்களிப்பாற்றிய பேராசிரியர் செ. யோகராசா நேற்று வியாழக்கிழமை கொழும்பு வைத்தியசாலை ஒன்றில் மரணமடைந்துள்ளார்.

இலங்கையில் வெளிவந்த அதிக நூல்களுக்கு அணிந்துரை எழுதியவர், தனது எழுத்துக்கள் மூலம் பல இளம் படைப்பாளிகளின் முகங்களில் வெளிச்சம் பாய்ச்சியவர் என்றும், எவருடனும் எந்த சந்தர்ப்பத்திலும் முரண்படாத, கோபம் என்ற உணர்வை வெளிக்காட்டாதவர் சிறந்த மனிதர் எனும் தன்மதிப்பை பெற்றிருந்தார்.

இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னுரைகள் ஓர் நூலாக வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிஸ் இலக்கிய சங்கம் கடந்த 2014 ஆம் ஆண்டு இவர்க்கு நிறைதமிழ் எனும் உயரிய விருதியினை வழங்கி கௌரவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவரது மறைவுச் செய்தி அறிந்து சுவிஸ் இலக்கிய சங்கம் சார்பாக கலாநிதி .கல்லாறு சதீஸ் உட்பட பல கலை இலக்கியவாதிகள் தமது ஆழ்ந்த அனுதாபங்களை அன்னாரின் குடும்பத்தினருக்கு தெரிவித்து வருகின்றனர்.