
மனைவியை கொலை செய்த இலங்கையர் சிங்கப்பூரில் கைது
தமது மனைவியைக் கொலை செய்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
30 வயதுடைய குறித்த நபர், கட்டோங் பகுதியில் உள்ள விடுதியொன்றில் தமது மனைவியை கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதான சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை ஒரு வாரத்துக்கு விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
