இலங்கையை சேர்ந்த நடிகை இந்தியாவில் உயிரிழப்பு!

சென்னையில் பிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் கயல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சுபாஷினி. இவர் சென்னை ஐயப்பன்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துள்ளார்.

இலங்கைகை சேர்ந்த இவர் பெங்களூரில் தனது கணவர் பிப்பின் என்பவருடன் வசித்து வந்த நிலையில் படப்பிடிப்புகள் காரணமாக போரூரில் தங்கி வந்தார்.

நேற்று திங்கட்கிழமை இரவு தனது கணவருடன் வீடியோ Call பேசிய போது ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சுபாஷினியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.