ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவி: ஐந்து வருடங்களில் ஐவருக்கு பகிர்வு
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ். நழிம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் இது தொடர்பான கடிதத்தை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பி படி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் நழிம் தேசியப் பட்டியல் உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த தேசியப் பட்டியல் உறுப்பினர் நியமனம் வருடத்திற்கு ஒருவருக்கு என்ற அடிப்படையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசால் பகிர்ந்தளிக்கப்படும் வாய்ப்பில் முதலாவதாக நழிம் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காலமான ஐந்து வருடத்தில் தலா ஒருவருக்கு ஒருவருடம் என்ற அடிப்படையில் இந்த தேசியப்பட்டியல் நியமனம் ஐவருக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.