உச்சம் தொட்டது இலங்கை சுங்கத்தின் வருவாய்

கடந்த 6 மாதங்களில், இலங்கை சுங்கத்தின் வருவாய் ஒரு டிரில்லியன் ரூபாயை கடந்துள்ளது, என இலங்கை சுங்கத் திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இந்த விடயம் தொடர்பில் அவர் கருத்து தெரிவித்தார்.

அரசாங்கம் நிர்ணயித்துள்ள வருவாய் இலக்கை விட அதிகூடிய வருவாயை இலங்கை சுங்கம் இந்தாண்டு பெற்றுக்கொள்ளும், என அவர் மேலும் தெரிவித்தார்.