சுவிட்சர்லாந்தின் வாலீஸ் மாநிலத்தில் வேகக் கட்டுபாட்டு ரேடார் – வாகனத்தில் பயணிப்போருக்கு எச்சரிக்கை !
சுவிட்சர்லாந்தின் வாலீஸ் (wallis) மாநிலத்தில் உள்ள மக்களின் வீதி பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் புதிய நடமாடும் வேககண்காணிப்பு ரேடார் சாதனத்தை மாநில பொலிசார் முதல்தடவையாக வாங்கியுள்ளனர்.
கடந்த ஆண்டில் அதிகரித்து வரும் விபத்து மற்றும் அதிவேக குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, மாநிலம் முழுவதும் பாதுகாப்பான சாலைகளை உறுதி செய்வதற்கான முயற்சிகளை மாநிலப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நடமாடும் ரேடார் சாதனம், பாடசாலைகளுக்கு அருகில், சுரங்கப்பாதைகளுக்குள் அல்லது கட்டுமானப் பகுதிகள் போன்ற பல்வேறு இடங்களிலும் மற்றும் விபத்து ஏற்படக்கூடிய இடங்களிலும் வைக்கப்படவுள்ளன.
வீதி போக்குவரத்தில் ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதும் , ஆபத்தான செயற்பாடுகளை தடுப்பதுமே தமது நோக்கம் என, மாநில பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மாநில பொலிசார் விபத்து தடுப்பு மற்றும் விழிப்புணர்வை வளர்ப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துவார்கள் எனவும் , வாலீஸ் மாநில வீதி பாதுகாப்பு அனைவருக்கும் கவலை அளிக்கிறது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வாலீஸ் மாநிலத்தில் வேகக் கட்டுப்பாட்டு கமராக்கள் மிகக் குறைந்தளவே பயன்பாட்டில் இருந்த நிலையில் நடமாடும் வேககண்காணிப்பு ரேடார் சாதனத்தை மாநில பொலிசார் முதல்தடவையாக வாங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.