ஹட்டன் ஸ்ரீ சிவ சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் விஷேட யாக பூஜை
-மஸ்கெலியா நிருபர்-
ஹட்டன் ஸ்ரீ சிவ சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில், இன்று சனிக்கிழமை காலை, சனி பகவான் பெயர்ச்சிக்கான விஷேட யாகம் இடம் பெற்றது.
நிகழ்வில் அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டனர், ஆலயத்தின் பிரதம குருக்கள் இந்த யாக பூஜையை நடத்தி வைத்தார்.
ஹட்டன் நகரில் உள்ள பக்தர்கள் மற்றும் ஹட்டன் நகரை அண்டிய பகுதிகளில் உள்ள பெருந்தோட்ட மக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.





