இலங்கை – நியூசிலாந்து போட்டியை முன்னிட்டு இன்று விசேட போக்குவரத்து திட்டம்

இம்முறை டி20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இலங்கை பங்கேற்கும் இரண்டாவது போட்டி நியூசிலாந்துக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.

இப்போட்டிக்கான அனைத்து நுழைவுச்சீட்டுகளும் விற்பனையாகி முடிந்துள்ளதால், பிரேமதாச விளையாட்டரங்கின் நுழைவாயில்கள் பிற்பகல் 4 மணிக்கே திறக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இன்று நடைபெறும் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டிக்காக விசேட போக்குவரத்துத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இப்போட்டியைப் பார்வையிட அதிகளவிலான இரசிகர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், இது தொடர்பில் விசேட போக்குவரத்துத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தப் பொலிஸார் தற்போது தீர்மானித்துள்ளனர்.