மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

இலங்கையின் மின்சக்தி துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டம் எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிசக்தி அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின்படி, இந்தச் சட்டத்தின் குறிப்பிட்ட சில பிரிவுகளைத் தவிர ஏனைய அனைத்துப் பிரிவுகளும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வருகின்றன.