இரத்தினபுரி மாவட்டத்தின் சில பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை
நிலவும் சீரற்ற காலநிலையை அடுத்து இரத்தினபுரி கல்வி வலயத்திற்கு உட்பட்ட இரத்தினபுரி, குருவிட்ட, எஹெலியகொட பிரதேச பாடசாலைகளுக்கும், நிவித்திகல கல்வி வலயத்திற்கு உட்பட்ட எலபாத்த மற்றும் அயகம பிரதேச பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சபரகமுவ மாகாண கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
இதேவேளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள சகல பாடசாலைகளும் நாளை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மாகாண கல்விச் செயலாளர் ரஞ்சித் யாப்பா எமது செய்திச் சேவைக்கு இதனைத் தெரிவித்தார்.
எனினும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் தற்காலிக முகாம்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்