
இராணுவ சிப்பாய் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
பனகோட இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை மாலை தன்னைத்தானே சுட்டுக் தற்கொலை செய்து கொண்டுள்ளார்
இறந்தவர் 28 வயதானவர், நவுலாவில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சிப்பாய் இன்று மாலை பனகோடா இராணுவ முகாமின் பீரங்கி படைப்பிரிவின் 12 வது பிரிவுக்கு முன்னால் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துள்ளதாகவும் , தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்று இராணுவம் தெரிவித்துள்ளது.
ஆபத்தான நிலையில் பனகோட இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் , இவர் மரணமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ஹோமகாமா பொலிசார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
