
நாளை சூரிய கிரகணம்
நாளை செவ்வாய்க்கிழமை சூரிய கிரகணம் ஏற்படும் என ஆர்தர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணப் பகுதியில் முழுமையாக 22 நிமிடங்களுக்கு இது தெரியும்.
கொழும்பில் மாலை 5.43 மணி முதல் 5.52 மணி வரை மட்டுமே அவதானிக்க முடியும்.
சூரிய கிரகணத்தின் அதிகபட்ச கிரகணம் மாலை 5.49 மணிக்கு நிகழும், அதன் முடிவு மாலை 6.20 மணிக்கு நிகழும்.
எனினும், இந்த சூரிய கிரகணம் நிகழும் போது சூரியன் மறையும் நேரம் என்பதால், சூரியனின் முகத்தை சந்திரன் சிறிய அளவில் மறைத்திருக்கும், என ஆர்தர் சி.கிளார்க் மையம் தெரிவித்துள்ளது.
