சிவன் கோயிலின் சமூகப் பணி

-மூதூர் நிருபர்-

திருகோணமலை சிவன்கோவில் (விசுவநாத சுவாமி கோயில்) நிருவாகத்தினரின் பல்கலைக்கழக அனுமதியினை பெற்ற ஏழை மாணவர்களுக்கு உதவிப்பணம் வழங்கும் திட்டத்தினை நடைமுறைப்படுத்த உள்ளனர்.

இதற்கான விண்ணப்பங்கள் தற்போது ஆலயத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.உதவிபெற விரும்பும் ஏழை மாணவர்கள் இம்மாத இறுதி வரை சிவன் கோவிலில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆலயத்தின் கட்டுமான, உள்ளகத் தேவைகள் பல இருந்தாலும் அதையும் சரிசெய்துகொண்டு ஆலயமானது சமூகப்பணி ஆற்றுவது வரவேற்கத்தக்கது.இச் செயற்பாட்டை பலரும் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்