ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் நூலக திறப்பு விழா

கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது மல்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தில் 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்ட “ஸ்மார்ட் வகுப்பறை, அதிபர் காரியாலயம் மற்றும் நூலக திறப்பு விழாவும்” பாடசாலை அதிபர் எம்.சி.நஸ்லின் றிப்கா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். சஹுதுல் நஜீம் கலந்து கொண்டு ஸ்மார்ட் வகுப்பறை, நூலகம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட அதிபர் காரியாலயம் அடங்கிய கல்வி வசதிகளை திறந்து வைத்து மாணவர்களுக்குக் கையளித்தார்.

இந்நிகழ்வில் கணக்காளர் கந்தையா லிங்கேஸ்வரன், பிரதி கல்விப் பணிப்பாளர்களான எம்.எச்.எம்.ஜாபீர், வரணியா சாந்தரூபன், ஏ.எம். ஹஸீன்,யூ.எல். றியால், எம்.எல்.எம். முத்தரிஸ், அஸ்மா அப்துல் மலிக் மற்றும் ஆனந்தகுமாரசாமி சஞ்சீவன் ஆகியோர் உட்பட கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் முன்னாள் கல்விப் பணிப்பாளர் ஏ.எல். முக்தார், உதவி கல்விப் பணிப்பாளர்கள், சக பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், ஊடக பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மார்க்க சொற்பொழிவை கலாச்சார உத்தியோகத்தர் மௌலவி ஏ.எம். தௌபீக் (நளீமி) நிகழ்த்தினார்

நிகழ்வின் இறுதியில் சிறப்பு இப்தார் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ரமழான் மாதத்தின் ஆன்மிகச் சூழலில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் விருந்தினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நோன்பு திறந்தனர்.