டுபாய் சுத்தா என அழைக்கப்படும் நிஷாந்த பிரியதர்ஷன கைது

செல்லுபடியாகும் உரிமம் இன்றி, வேலை தேடுபவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிய குற்றச்சாட்டின் பேரில்,  “டுபாய் சுத்தா'” என அழைக்கப்படும் நிஷாந்த பிரியதர்ஷன இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்

சந்தேகநபர் இன்று புதன்கிழமை கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.