லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் மின்துண்டிப்பு
மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக மின்சார சபை கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் ஒரு பகுதியிலும் மின்தடையை ஏற்படுத்தியுள்ளது.
வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலை மற்றும் பாதுகாப்பு சேவைகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது,
எனினும், பின்னர் கொடுப்பனவுகளை செலுத்தியதன் பின்னர் மின்சார இணைப்பு மீளமைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வைத்தியசாலையில் மின்சார சபை மின்வெட்டை ஏற்படுத்தியமைக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது